இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் – பிரதமர் மோடி உரை!!

0

நம் இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு மிக அவசியம் என பிரதமர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசியுள்ளார்.

மோடி:

தற்போது நாட்டின் பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக்கின் குழு நடைபெற்று வருகிறது. இது 6வது ஆட்சி குழு கூட்டம். தற்போது இந்த கூட்டம் காணொளி மூலம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். இதனை சென்னை தலைமை செயலகத்தில் வைத்து எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் கலந்துகொண்டு வருகிறார். தற்போது இந்த கூட்டத்தில் நரேந்திர மோடி பேசி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் கூறியதாவது, கொரோனா காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஒன்று சேர்ந்து பணியாற்றியதால் தான் நம் அதில் வெற்றி பெற்றோம். தற்போது அதேபோல் நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க ஒருங்கிணைப்புடன் போராட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். மேலும் கூட்டாட்சி தத்துவம் என்பது மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவது மட்டுமல்ல, மாவட்ட அளவிலும் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி வேகமாக அடையும்.

கரூரில் நடந்த போராட்டம் – எம்.பி ஜோதிமணி உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் அதிரடி கைது!!

மேலும் இந்தியாவின் தற்சார்பு திட்டம் உலக நாட்டிற்கு அனைத்திற்கும் முன்னோடியாக திகழ வேண்டும். மேலும் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு நாம் மிகவும் உதவ வேண்டும். மேலும் கடந்த சில நாட்களாகவே வங்கி கணக்குகளின் எண்ணிக்கையும், தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவின் முதுகெலும்பு இளைஞர்கள் தான் என்று மோடி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here