உலக கோப்பைக்கு தயாரான இந்திய இளம் படை…, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் யுத்தம்!!

0
உலக கோப்பைக்கு தயாரான இந்திய இளம் படை..., தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் யுத்தம்!!
உலக கோப்பைக்கு தயாரான இந்திய இளம் படை..., தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் யுத்தம்!!

சர்வதேச மகளிர் கிரிக்கெட் அணிக்கான உலக கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 10 முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு தாயாருக்கும் வகையில், இந்திய மகளிர் அணியானது, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முத்தரப்பு தொடர்களில் விளையாட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனிடையே, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் முதல் சீசன் தென் ஆப்பிரிக்காவில் வரும் 14ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 16 அணிகள் பங்கு பெற உள்ளன. இந்த 16 அணிகள் 4 பிரிவுகளின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அம்பயரை கோபப்படுத்திய பாகிஸ்தான் வீரர்கள்…, மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் நிர்வாகம்!!

இதில், இந்திய அணி குரூப் D யில் ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்த தொடரில் நட்சத்திர வீராங்கனையான ஷஃபாலி வர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. U-19 இந்திய மகளிர் அணி இந்த தொடரின் முதல் போட்டியாக தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

உலக கோப்பைக்கான U19 இந்திய அணி: ஷஃபாலி வர்மா (சி), ஸ்வேதா செஹ்ராவத், ரிச்சா கோஷ் (வாரம்), ஜி த்ரிஷா, சௌமியா திவாரி, சோனியா மெஹதியா, ஹர்லி காலா, ஹிரிஷிதா பாசு (வாரம்), சோனம் யாதவ், மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, டைட்டாஸ் சாது, ஃபலக் நாஸ், ஷப்னம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here