தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கலாம் – TTV தினகரன் அறிக்கை..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என TTV தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TTV தினகரன் அறிக்கை..!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது கவலையளிக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரோனா வைரஸின் தாக்கம் சாவல் நிறைந்ததாக இருக்கும். எனவே ஏப்ரல் 14 ம் தேதிக்கு பிறகு மேலும் ஓரிரு வாரங்கள் ஊரடங்கு உத்தரவை நீடிக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் சென்னை போன்ற இடங்களில் இப்போது வெறுமனே வீடு, வீடாக சென்று கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுவிட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக கொரோனா பாதிப்பை அரை மணிநேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்த பிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும்.

அரசின் கடமை..!

கொரோனா யுத்தத்தில் போர் வீரர்களைப் போல மக்களைக் காப்பாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் உள்ளிட்டோரை கூடுதல் கவனம் செலுத்தி காத்திட வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்திடக்கூடாது.

ஊரடங்கு உத்தரவால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும். அரசு அறிவித்த ரூ.1000 உதவித்தொகை இன்னும் முழுமையாக சென்றடையாத நிலையில், ஊரடங்கை நீட்டிக்கும் போது குறைந்தபட்சம் அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கான ஏற்பாட்டினை திட்டமிட்டு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்துவது மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here