சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா..? தீவீர விசாரணையில் இறங்கிய அமெரிக்கா..!

0

சீனா உண்மையை மறைத்து வருகிறது அமெரிக்காவைவிடவும் கொரோனா வைரஸால் சீனாவின் உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

சீனாவில் ஒரே நாளில் 1290 பேர் பலி..!

கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையை ஒரே நாள் இரவில் 50% உயர்த்தி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. வுஹனில் 1290 பேர் கூடுதலாக பலியானதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் வுஹானில் மட்டும் 3869 பேர் பலியானதாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக சீனாவில் 4,632 பேர் பலியாகி உள்ளனர்.

சீனா உண்மையை மறைகிறது..!

உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்த சீனா உண்மையான பலி எண்ணிக்கையை சொல்லவில்லை. அங்கு இன்னும் பலர் பலியாகி இருக்கலாம். ஆனால் சீனா உலக நாடுகளின் மத்தியில் தங்கள் மதிப்பை உயர்த்த வேண்டும் என்று பலி எண்ணிக்கையை குறைத்து காட்டியுள்ளது. கொரோனா குறித்த உண்மையை மறைத்தது போல தற்போது கொரோனா பலி எண்ணிக்கையையும் சீனா மறைக்கிறது என்று புகார் வந்தது.

டிரம்ப் அதிரடி..!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு ட்வீட்டில் கண்ணுக்குத் தெரியாத எதிரியிடமிருந்து இறப்பவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஆனால் அவர்கள் கூறியதைவிட மிக அதிகமாக இருக்கலாம் அமெரிக்காவைவிடவும் மிக அதிகம் நெருங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சீன வெளிப்படைத்தன்மை குறித்து பல நாடுகளுக்கும் ஐயம் உள்ளது. அமெரிக்க அதிபர் அதை நேரடியாக போட்டு உடைத்துள்ளார்.

சீனா விளக்கம்..!

வுஹான் பகுதியில் நடந்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையை திடீரென 50 சதவிகிதம் அதிகரித்து சீனா நேற்று அறிவித்திருந்தது.

வுஹான் நகரத்தில் புதிதாக 1,290 இறப்புகளை சீனா சேர்த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சீன நிர்வாகம் வேறு மாதிரி கூறுகிறது. அந்த மாகாணத்தில் பலரும் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்றதாகவும் அந்த மரணங்கள் தொடர்பான புள்ளி விவரம் தற்போது எடுக்கப்பட்டு அது வெளியிடப்பட்டதாக கூறுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here