‘உருமாறிய கொரோனா பற்றி முன்பே எச்சரித்திருந்தோம்’ – விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்!!

1

தற்போது கொரோனா தொற்றினால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அனால் கொரோனா இரண்டாம் அலை வரும் எனவும் உருமாற்றம் அடைந்த வைரஸ் மிகவும் கொடியது எனவும் மார்ச் மாதமே கூறியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

ஆபத்தை நோக்கி இந்தியா :

2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம்  தொடங்கிய கொரோனா பரவல் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. முதல் அலையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை விட பன்மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.82 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும் 3000 கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். தற்போது லட்சக்கணக்கான பேர் சிகிச்சை பெற்றும் 1.06 கோடி பேர் குணமடைந்து உள்ளனர்.

Coronavirus on scientific background

மக்களிடையே கொரோனா தொற்று குறித்த புரிதல் குறைவாக உள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருக்கும் சூழ்நிலையை பற்றி மத்திய மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா, தாங்கள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் கொரோன வைரஸ் உருமாற்றம் அடைந்து காணப்படும் எனவும், உருமாறிய கொரோனா மிக வேகமாக பரவும் என அவர் கூறியிருந்தார். இந்தியா ஆபத்தை நோக்கி சென்றுகொண்டு இருப்பதாய் மத்திய சுகாதார செயலாளரிடம் அவர் முன்கூட்டியே கூறியதாகவும் கூறுகிறார்.

தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு தடை? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

ஆனால் தாம் கூறிய கருத்துக்கள் எதுவும் பிரதமர் மோடியிடம் சென்றடைவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் கூறுகிறார். ராய்ட்டர்ஸில் இது குறித்து செய்தி வெளியானது. ஆனால் இந்திய ஊடகங்கள் அதில் அதிக நாட்டம் செலுத்தாமல் இருந்தது மனவருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் உருமாறிய கொரோனாவால் தொற்று எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என மத்திய அரசிடம் எச்சரித்ததாகவும் அவர் கூறுகிறார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here