தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு தடை? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

1
madurai highcourt latest
madurai highcourt latest

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இதற்கு எதிராக மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமான அளவில் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி அன்று தமிழக அரசு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தியது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மேற்கொள்ளப்படும் என்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கின் போது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதனை எதிர்த்து தூத்துக்குடியை சேர்ந்த நபர் ஒருவர் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, மற்ற மாநிலங்களில் ஊரடங்கின் பொழுது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தமிழகத்தில் உள்ள கட்டுப்பாடுகளால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஞாயிற்று கிழமை மற்றும் இரவு நேர ஊரடங்கினால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்தார்.

மூன்றாவது முறையாக மம்தா முதல்வராக இன்று பதவி ஏற்பு – குவியும் வாழ்த்துக்கள்!!

எனவே தற்போது இரவு மற்றும் முழு நேர ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்திற்கு வழக்கம் போல் அனுமதி வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here