ரயில் பயணிகளே., முன்பதிவு டிக்கெட்டை கேன்சல் செய்தால் எவ்வளவு ரீஃபண்ட் கிடைக்கும்? முழு விவரம் உள்ளே!!!

0

நாடு முழுவதும் பெரும்பாலானோர் ரயில் பயணங்களை விரும்புவதால், முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முன்கூட்டியே தீர்ந்து விடுகிறது. ஆனாலும் அவ்வாறு புக்கிங் செய்யும் சிலர், பல்வேறு காரணங்களால் டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டியுள்ளது. அப்படி கேன்சல் செய்யும் பட்சத்தில், ஒரு ,குறிப்பிட்ட தொகையை ரயில்வே நிர்வாகம் பிடித்தம் செய்து வருகிறது.

அது தொடர்பான விதிமுறைகள் பின்வருமாறு:
  • ரயில் புறப்படும் 48 மணி நேரத்திற்கு முன்னதாக கேன்சல் செய்தால், ஏ/சி முதல் வகுப்புக்கு ரூ.240, ஏ/சி 2 ஆம் வகுப்புக்கு ரூ.200, ஏ/சி 3 ஆம் வகுப்புக்கு ரூ.180, ஸ்லீப்பர் கோச் டிக்கெட்டுக்கு ரூ.120 மற்றும் செகண்ட் சிட்டிங் டிக்கெட்டுக்கு ரூ. 60 என்ற அளவில் பிடித்தம் செய்யப்படுகிறது.
  • அதே 12 முதல் 48 மணி நேர இடைவெளியில் கேன்சல் செய்தால் 25%+GST பிடித்தம் செய்யப்படுகிறது. 4 முதல் 12 மணி நேர இடைவெளியில் கேன்சல் செய்தால், 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
  • 4 மணி நேரத்திற்குள் கேன்சல் செய்யும் டிக்கெட் எதற்கும் ரீஃபண்ட் கிடைக்காது. அப்படி பெற வேண்டுமெனில், TDR பூர்த்தி செய்ய வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

ரம்ஜான் பண்டிகை எதிரொலி: தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை மாற்றம்? வெளியான தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here