Friday, May 17, 2024

நம்மை செதுக்கியவர்களை கொண்டாடுவோம் – நாளை “ஆசிரியர் தினம்”!!!

Must Read

“எண்ணும் எழுத்தும் கண் என தகும்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப நம் அனைவரின் ஞான கண்களை திறந்தவர்கள் தான் ஆசிரியர்கள். அவர்களை மதிக்கும் வகையில் நாளை “ஆசிரியர் தினம்” கொண்டாடப்படுகிறது.

கல்வி கண் திறக்கும் ஆசிரியர்கள்:

ஒரு குழந்தைக்கு ஒரு தாய் எப்படி எல்லாவற்றையும் கற்றுகொடுக்கிறாளோ அதே போல் தான் தாயின் அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் ஆசிரியர்கள் நமக்கு எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுகொடுக்கிறார்கள். ஒருவரின் வாழ்வை மாற்றியமைக்கும் உன்னத பணியினை ஆசிரியர்கள் தான் செய்கிறார்கள். அவர்கள் ஒருவரின் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றி அமைக்கின்றனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அவர்கள் தங்கள் வாழ்வையே நமக்காக தான் செலவிடுகிறார்கள். நம் குழந்தை பருவத்தை இனிமையானதாகவும், பள்ளி பருவத்தை மறக்கமுடியாததாகவும் மாற்றுவது அவர்கள் தான். நாம் என்ன தான் அவர்கள் மீது கோபப்பட்டாலும் அவர்களை ஒருநாளும் நம்மால் வெறுக்க முடியாது.

ஒரு ஆசிரியரின் பங்கு ஒருவரின் வாழ்வில் மிக அதிகமான இடத்தை பிடித்துள்ளது. அப்பேற்பட்ட ஆசிரியர்களுக்கு நாம் நன்றி செலுத்துவது முறையான ஒன்றாகும். அது நமது கடமை என்று கூட சொல்லலாம். அப்பேற்பட்ட ஆசிரியர் தினம் நாளை.

நாளை ஆசிரியர் தினம்:

ஆசிரியர்களை மதிக்கவும் அவர்களது தியாகத்திற்கு நன்றி செலுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி “ஆசிரியர் தினம்” கொண்டாடப்படுகிறது. நம் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆண்டுதோறும் நம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு 1968 ஆம் ஆண்டில் இருந்து அனுசரிக்கப்படுகிறது.

காட்டுமன்னார் கோவிலில் பயங்கர வெடிவிபத்து – மீட்புப்பணிகள் தீவிரம்!!

இந்த நாளில் நமது தமிழக அரசு உன்னதமாக செயல்படும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்கிறது. இது அவர்களை ஊக்குவிக்கும் விதமானதாக அமைகிறது. நாமும் நம் ஞான கண்களை திறந்த ஆசிரியர்களை இந்த நாளில் நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சென்னை to குருவாயூர் செல்லும் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்., கூடுதலாக பெட்டி இணைப்பு? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா உள்ளிட்ட வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பேருந்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -