பிக் பாஸ் 4 இல் இவங்களும் இருக்காங்களா?? – அப்போ பரபரப்புக்கு பஞ்சம் இல்லை!!!

0

பிக் பாஸ் சீசன் 4 இல் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட் லீக் ஆகி உள்ளது.

பிக் பாஸ்

தமிழில் 2017 இல் முதன்முதலில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரபல சேனலான விஜய் டிவி யில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் முதல் சீசன் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. கடந்த 3 சீசன்களிலும் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்கினார். லாக் டவுன் காரணமாக 4 வது சீசன் தள்ளி வைக்கப்பட்டது. இந்த சீசனையும் கமலகாசன் அவர்களே தொகுத்து வழங்குகிறார்.

bigg boss
bigg boss

இந்த சீனில் யார் கலந்து கொள்கின்றனர் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் அடிப்படையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது பெரிய பிரச்சனை ஆகிக்கொண்டிக்கும் வனிதா பீட்டர் பால் திருமணத்தை விமர்சித்து பேசிய சூர்யா தேவி இதில் பங்கேற்க உள்ளார். மேலும் ஷிவானி நாராயணன், பூனம் பாஜ்வா, சனம் ஷெட்டி, டிக் டாக் மூலம் பிரபலமான இலக்கியா போன்றோர் பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here