ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்., அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! நடக்கப்போவது இதானா?

0
ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்., அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! நடக்கப்போவது இதானா?
ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்., அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! நடக்கப்போவது இதானா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது பரபரப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் முல்லையின் ஹோட்டலுக்கு உணவு துறை திடீர் ரெய்டு வருகிறது. புகாரியின் அடிப்படையில், சோதனை செய்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்போது, சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருக்கிறதென்று ஹோட்டலுக்கு சீல் வைத்து விடுகின்றனர். இதைப் பார்த்து, தனம் அழுகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பின்னர் கடையில் மூர்த்தி, கதிர், ஜீவா பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது என்று தகவல் தெரிகிறது. உடனே அனைவரும் கிளம்பி ஹோட்டலுக்கு செல்கின்றனர். கடைக்கு சீல் வைக்கப்பட்டதை பார்த்ததும் மூர்த்தி அதிர்ச்சியில் சிலை போல் நிற்கிறார். உடனே இதை சரி செய்யணும் என்று ஜீவாவும், மூர்த்தியும் கிளம்பிகின்றனர். கதிர் ஹோட்டல் ஆரம்பித்ததிலிருந்து, இப்போது நடந்தது வரை அனைத்தையும் நினைத்து வருந்துகின்றார்.

வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுக்கும் பாக்யா., எழில் வாழ்க்கையில் வெடித்த பிரச்சினை., புது அத்தியாயத்தில் பாக்கியலட்சுமி!!

வீட்டில் தனம், மீனா, முல்லை இதுகுறித்து பேசுகின்றனர். முல்லை ஹோட்டலுக்கு இப்படி ஆயிடுச்சே என்று மிகவும் வருத்தப்பட்டு பேசுகிறார். தனம் முல்லையிடம் ” கர்ப்பமா இருக்கிற பொண்ணு எதை நினைச்சும் கவலை படக்கூடாது, எல்லாம் சரி ஆயிடும் ” என்று கூறுகிறார். இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. இனி கதிர் தனது குடும்பத்துடன் சேர்ந்து, ஹோட்டலை மீண்டும் திறக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்பதே, இனி வரும் எபிசோடுகளில் காட்டப்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here