நியூ ரெகார்டை கிரியேட் செய்த அஜித் குமார்.., துணிவு படத்தின் அசத்தல் சாதனை!!

0
நியூ ரெகார்டை கிரியேட் செய்த அஜித் குமார்.., துணிவு படத்தின் அசத்தல் சாதனை!!
நியூ ரெகார்டை கிரியேட் செய்த அஜித் குமார்.., துணிவு படத்தின் அசத்தல் சாதனை!!

நடிகர் அஜித்குமார் புதிய சாதனை படைத்துள்ளதாக இணையதளத்தில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

துணிவு திரைப்படம் :

தமிழ் திரையுலகில் எண்ணற்ற ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது போனி கபூர் மற்றும் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான நாள் முதல் இருந்து தற்போது வரை துணிவு திரைப்படம் 150 கோடி வசூல் அள்ளி உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. மேலும் தமிழகத்தில் மட்டும் 70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுக்கும் பாக்யா., எழில் வாழ்க்கையில் வெடித்த பிரச்சினை., புது அத்தியாயத்தில் பாக்கியலட்சுமி!!

இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் ஒரு புதிய சாதனை படைத்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது துணிவு திரைப்படம் வட அமெரிக்காவில் வெளியான நிலையில், இப்போது வரை ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படத்தை வெளியிட்ட சரிகாமா சினிமாஸ் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கில் வசூல் செய்த அஜித் திரைப்படங்களில் துணிவு மட்டுமே சாதனை படைத்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here