Friday, May 3, 2024

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அதிரடியாக குறைந்த தங்க விலை!!

Must Read

தமிழகத்தில் இன்று தங்க விலை சற்று சரித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்க விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது.

கொரோனாவால் விலை உயர்வு:

கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தபட்ட பொது முடக்க உத்தரவால் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. என்றும் காணாத அளவு சரிந்ததால் முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்து பாதுகாப்பான முதலீட்டில் தங்களது பணத்தை சேமிக்க நினைத்தனர். சேமிப்பதற்கு நல்ல வழியாக தங்கத்தை கருதினர். தங்கத்தில் முதலீடு செய்வது எதிர்கால நலனாகவும் கருதப்பட்டது.

EMI செலுத்த கால அவகாசம் – வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என மத்திய அரசு உறுதி!!

gold
gold

அதனால் பொது முடக்க காலத்தில் கூட தங்க விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இது எல்லா தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும், கடந்த சில வாரங்களாக விலை நிலவரம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்தது. இந்த மாதம் ஆரம்பம் முதலே தங்க விலை ஏற்றம் கண்டு வந்தது. ஆனால், இன்று நிம்மதி அடையும் வகையில் தங்க விலை சரிந்துள்ளது. இது அனைவரையும் சற்று மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது. அதனால் சவரன் ரூ.38,800 என்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,850 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

gold
gold

வெள்ளியும் சில்லறை வர்த்தகத்தில் கிராம் 64.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.64,700 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய விலை நிலவரத்தால் பொது மக்கள் மற்றும் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -