ஒரே மையத்தை சேர்ந்த 700 பேர் எப்படி தேர்ச்சி பெற முடியும்?? TNPSC தேர்வாணையம் கொடுத்த விளக்கம்!!!

0
ஒரே மையத்தை சேர்ந்த 700 பேர் எப்படி தேர்ச்சி பெற முடியும்?? TNPSC தேர்வாணையம் கொடுத்த விளக்கம்!!!
ஒரே மையத்தை சேர்ந்த 700 பேர் எப்படி தேர்ச்சி பெற முடியும்?? TNPSC தேர்வாணையம் கொடுத்த விளக்கம்!!!

TNPSC தேர்வில் ஒரே மையத்தை சேர்ந்த 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என TNPSC தெரிவித்துள்ளது.

TNPSC

TNPSC சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளருக்கான 1339 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தேர்வை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நிலையில் இதற்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வெளியான தேர்வு முடிவுகளில் ஒரே மையத்தை சேர்ந்த 700 பேர் தேர்ச்சி பெற்றிருந்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே மையத்தை சேர்ந்த 700 பேர் எப்படி அடுத்தடுத்து தேர்ச்சி பெற முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

TNPSC Group 4 : 5,00,000 மாணவர்களுக்கு தேர்வு முடிவு வரவில்லை.., போலீசில் புகார்.., தேர்வாணையம் கொடுத்த விளக்கம்!!!

இதனால் இந்த தேர்வில் நடந்த குளறுபடி குறித்து ஆராய பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எதிர் கட்சி தலைவர் பழனிசாமி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோரும் இது குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் TNPSC நிர்வாகம் முறையாக விசாரணை நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here