IPL 2023: மீண்டும் களமிறங்க இருக்கும் ஆஸ்திரேலிய நட்சத்திரம்…, வெளியான நியூ அப்டேட்!!

0
IPL 2023: மீண்டும் களமிறங்க இருக்கும் ஆஸ்திரேலிய நட்சத்திரம்..., வெளியான நியூ அப்டேட்!!
IPL 2023: மீண்டும் களமிறங்க இருக்கும் ஆஸ்திரேலிய நட்சத்திரம்..., வெளியான நியூ அப்டேட்!!

ஐபிஎல் தொடரின் 16வது சீசனுக்காக போட்டிகள் நடத்துவதில் இருந்து ஒளிபரப்புவது வரை பல புதுமைகளை புகுத்தி வரும் நிலையில், ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மீண்டும் களத்தில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலிய நட்சத்திரம்

கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஐபிஎல் தொடர் இதுவரை வெற்றிகரமாக 15 சீசனை கடந்துள்ளது. இந்தியா மூலம் பிரபலமான இந்த ஐபிஎல் லீக் தொடர், உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை கொண்டுள்ள நாடுகளிலும் பரவியது. இதன் விளைவே, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில், வெவ்வேறு பெயர்களில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் தொடர்ச்சியாக இந்திய ரசிகர்கள் தற்போது, ஐபிஎல் 16 வது சீசனை எதிர்நோக்கி உள்ளனர். இந்த ஐபிஎல் சீசன் வரும் 31ம் தேதி முதல், 10 அணிகளுக்கு இடையே தொடங்க இருக்கிறது. இந்த சீசனில், பிளேயிங் லெவனை அறிவிப்பது முதல், போட்டியை நேரடியாக ஒளிபரப்புவது வரை பல்வேறு புதுமைகளை புகுத்தி உள்ளனர்.

இன்று உலக தியேட்டர் தினம் 2023 – ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

இந்த வகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல்லில் இருந்து 2021 ஆம் ஆண்டே விலகி இருந்தாலும், எதிர்வரும் சீசனில் மீண்டும் களத்தில் இறங்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் 2023 இல் வர்ணனையாளராக தனது பங்களிப்பை கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here