டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் எப்போது தொடங்கும்..? செயலாளர் நந்தகுமார் விளக்கம்..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கு செயலாளர் நந்தகுமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரிசெய்யும் வகையில் அரசு சார்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்றாக அரசுத் துறைகளில் புதிய காலிப்பணியிடங்களை உருவாக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற வாய்ப்பு இல்லை என அதன் செயலாளர் நந்தகுமார் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

கொரோனா பாதிப்பு ஆகஸ்ட் மத்தியில் 2 கோடியை தாண்டும் – நிபுணர்கள் எச்சரிக்கை..!

மேலும் சூழல் சரியான உடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். எனவே தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் எனவும், கொரோனா பாதிப்பு முடிந்த பின் 3 மாத கால இடைவெளி விட்டு தான் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே கட்டயாமாக போதிய கால இடைவெளி அளிக்கப்படும் என நந்தகுமார் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here