TNPSC குரூப் 2 நேர்முகத் தேர்வு இந்த நாளில் நடைபெறும்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

0
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் இதற்கான தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதற்கு முன்னர் குரூப் 2 மற்றும் 2 ஏ பணிநிலை குரூப் 2 2A காண தேர்வு கடந்து 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதன்மை தேர்வுகள் நடைபெற்றது.
ஆனால் இந்த தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து TNPSC தேர்வாணையம் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி நேர்முகத் தேர்வு உடைய பதவிகளுக்கு பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் பதிவெண்களை மட்டும் வெளியிட்டனர். இந்நிலையில் நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி நடைபெறும் என TNPSC தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here