தமிழக மக்களே உஷார்., மின் கட்டணம் குறித்து இணையத்தில் உலா வரும் வதந்தி! அமைச்சர் அதிரடி விளக்கம்!!

0
தமிழக மக்களே உஷார்., மின் கட்டணம் குறித்து இணையத்தில் உலா வரும் வதந்தி! அமைச்சர் அதிரடி விளக்கம்!!
தமிழக மக்களே உஷார்., மின் கட்டணம் குறித்து இணையத்தில் உலா வரும் வதந்தி! அமைச்சர் அதிரடி விளக்கம்!!

தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் புதிய நெறிமுறைகள் வகுத்துள்ளதாக வெளிவந்த தகவல் பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

ஒரே மின் இணைப்பு:

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.63 கோடி மின் பயனாளர்கள் தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு கட்டாயப்படுத்தியது. அதன்பேரில் இதுவரை சுமார் 99 சதவீதம் மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வீட்டு இணைப்புகளுக்கு வழங்கி வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் புதிய நெறிமுறை கையாள உள்ளதாக தகவல் வெளியாகியது. அதன்படி ஒரே இடத்தில் எண்ணற்ற வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை அகற்றி ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கான நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மின்வாரியத் துறைக்கு வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது. மேலும் ஒரே இணைப்பாக மாற்ற முன்வராவிட்டால் அந்த மின் இணைப்புகளை 1D கட்டண விகித பட்டியலில் (அதாவது 100 யூனிட் ரூ.2800) சேர்க்குமாறு அறிவுறுத்த பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படி சமூக ஊடகங்களில் உலாவும் செய்தி முற்றிலும் போலியானது என அமைச்சர் செந்தில் பாலாஜி அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்., முதன்மை கல்வி அலுவலர் திடீர் உத்தரவு!!

அதாவது “ஒரு இடத்தில் ஒருவரின் பெயரில் 1 க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்றவே ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சில மோசடி கும்பல் இதை தவறான கருத்தாக மாற்றி ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.” என்று விளக்கமளித்துள்ளார். எனவே இந்த போலி தகவலை தொடர்ந்து வீடு உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய மின்வாரியத் துறை அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here