பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு அறிவிப்பு!!

0
tn transport

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக இன்று 11 ம் தேதி முதல் 13 ம் தேதி புதன்கிழமை வரை 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக தீபாவளி உள்ளிட்ட சில பண்டிகைகளை ஓட்டி  வேறு மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள் அனைவரின் வசதிக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வழக்கத்தின்படி பொங்கல் தினத்திற்காக இன்று திங்கள்கிழமை முதல் 13 ம் தேதி புதன்கிழமை வரை தமிழகத்தில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் போக்குவரத்து துறையின் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பேசப்பட்டது.

மாஸ்டர் படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் – கதை திருடப்பட்டதாக சர்ச்சை!!

ஆலோசனையில் நியமித்தபடி தினசரி இயங்கும் 2,050 போக்குவரத்து பேருந்துகளுடன் 4,078 பேருந்துகள் இயக்கப்படும். இந்த மூன்று நாட்களுக்கு சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும் பிற ஊர்களுக்கு 5,993 பேருந்துகளும் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு மக்கள் திரும்பி வருவதற்கு வசதியாக 17ம் தேதி முதல் 19 ம் தேதி வரை தினசரி இயக்கப்படும் 2,050 பேருந்துகளுடன் 3,393 சிறப்பு பேருந்துகளும், மற்ற ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 15,270 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here