#INDvsAUS  சிட்னி டெஸ்ட் – 407 ரன்கள் இலக்கு!! வெற்றிபெறுமா இந்தியா??

0

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணிக்கு ஆஸ்திரேலியா அணி 407 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியின் கடைசிநாள் என்பதால் போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா vs  ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணி தற்போது டெஸ்ட் தொடர்களை விளையாடி வருகிறது. கடந்த 7ம் தேதி சிட்னியில் வைத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 338 ரன்களை குவித்து ஆட்டத்தை இழந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். இந்தியா தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்தியா அணி 244 ரன்களில் ஆஸ்திரேலியா வேகத்தில் சுருண்டது. இந்தியா தரப்பில் புஜாரா மற்றும் கில் அரைசதத்தை பதிவு செய்தனர். ஆஸ்திரேலியா அணியின் கம்மின்ஸ் 4 விக்கெட்க்ளை வீழ்த்தி அசத்தினார். அதன்பிறகு தனது 2வது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலியா அணி  அபாரமாக விளையாடி வந்தது.  இரண்டாவது இன்னிங்சில் 312 ரன்களை குவித்து 6 விக்கெட்களை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக மாரன்ஸ் 73 ரன், ஸ்மித் 81 மற்றும் கிரீன் 84 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்துள்ளனர். தற்போது இந்தியா அணிக்கு 401 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

401 ரன்கள் இலக்கு:

2 வது இன்னிங்க்ஸை துவக்கிய இந்தியா அணி முதல் இன்னிக்ஸை போலவே ரோஹித் மற்றும் கில் ஜோடி 71 ரன்கள் குவித்த நிலையில் கில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோஹித் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் ரஹானே 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

மாஸ்டர் படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் – கதை திருடப்பட்டதாக சர்ச்சை!!

பிறகு புஜாரா மற்றும் பாண்ட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சதம் அடிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் பாண்ட் 97 ரன்கள் மற்றும் புஜாரா 77 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்துள்ளனர். தற்போது களத்தில் விஹாரி மற்றும் அஸ்வின் விளையாடி வருகின்றனர். இன்று போட்டியின் கடைசி நாள் என்பதால் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

லைவ் ஸ்கோர்:

இலக்கு – 401
இந்தியா – 280\5
விஹாரி – 4
அஸ்வின் – 7

தேவைப்படும் ரன்கள் – 127

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here