ரேஷன் கடைகளுக்கு இந்த 3 நாட்கள் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!

0
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்ப்ரைஸ் - ரேஷன் பொருட்களோடு புதிய பொருள் விநியோகம்! அரசுஅறிவிப்பு!!
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்ப்ரைஸ் - ரேஷன் பொருட்களோடு புதிய பொருள் விநியோகம்! அரசுஅறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் இயங்கிய காரணத்தால், வேறு நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

ரேஷன் கடைகள் விடுமுறை:

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்ட்ட ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஏழை மக்கள் உரிய வருமானம் இன்றி தவித்த காரணத்தால் அரசு சார்பில் ரேஷன் கடைகளில் சர்க்கரை, கோதுமை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் அரசு சார்பில் இலவச முகக்கவசங்களும் விநியோகிக்கப்பட்டது. சமூக இடைவெளி, டோக்கன் சிஸ்டம் போன்ற காரணங்களால் பொருட்கள் விநியோகிப்பதில் வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் செலவானது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ration shop
ration shop

புரட்டாசி மாதம் ஏன் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது?? அறிவியலும், ஆன்மீகமும்!!

இதனால் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் இயங்கின. மேலும் கடை ஊழியர்களுக்கும் தினசரி கூடுதல் படிக்காசு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 10, ஆக.7, செப்.4 ஆகிய 3 விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் செயல்பட்டன. இதற்கு மாற்றாக செப்.19, அக்.17, நவ.21 ஆகிய நாட்கள் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here