Tuesday, May 21, 2024

இந்தி கலாச்சாரத்தை திணிப்பது தான் தவறு – அன்றே சொன்ன பெரியார் பிறந்த தினம் இன்று!!

Must Read

தீண்டாமை என்ற கொடுமையை எதிர்த்து, அனைவரும் இங்கு சமம் தான் என்றுகடவுள் ஏழைகளுக்கு உதவுவதில் தான் மகிழ்ச்சி அடைவர் என்ற கருத்தை வலுவாக மக்களுக்கு கூறி அதனை வாழ்வில் பின்பற்றிய “வைக்கம் வீரர்” ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம் இன்று. இன்று அவரது 142 வது பிறந்த தினம்.

“படிக்காத மேதை”

வலுவான கருத்துக்ளை கூற பெரிதாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை தனது வாழ்நாளில் நிரூபித்தவர், பெரியார். மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர், ஆனால், அவரது சிந்தனைகள் உயர்ந்து இருந்தன. சிறுவயதில் இருந்தே சாதி கொடுமைக்கு எதிராக போராடியவர். அதனை எப்படி மாற்றலாம் என்றும் சிந்தனை செய்தவர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

சரியான கல்வி கிடைத்தால் தான் இங்குள்ள அறியாமை நீக்கப்படும் என்பதை உணர்ந்தவர். தமிழகத்தில் அதிகமாக பின்பற்றபட்டு வந்த சாதி முறையை ஒழிக்க கடுமையாக போராடிய உத்தமர். அவரது போராட்டத்திற்கான விளைவு தான் இன்றும் பல துறைகளை பலருக்கும் சரிசமமான மதிப்பு கொடுக்கப்படுகிறது.

“உயரிய சிந்தனைகள்”

அவர் தனது சிந்தனை மற்றும் கருத்துக்களை தனது எழுத்துக்கள் மூலமாக வெளிப்படுத்தினர். 40 ஆண்டுகளுக்கு மேலாக “விடுதலை” மற்றும் “இதழ்” என்ற புத்தகங்களில் பல கட்டுரைகள் எழுதி உள்ளார். பெண்களுக்கு சொத்தில் பங்கு தரப்பட வேண்டும் என்ற கருத்தை முதலில் எடுத்துரைத்தவர், பெரியார். பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தில் கலப்பு திருமணத்திற்கு ஆதரவை அளித்து புரட்சி செய்தவர்.

“கல்வியினை கொண்டு ஜெயிக்கலாம்”

கல்வி ஒருவருக்கு மட்டும் கிடையாது, அது அனைவருக்கும் பொதுவானது என்பதை அனைவர்க்கும் உணர்த்தியவர். பழங்கால மூடநம்பிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்டவர், அதனாலேயே இவருக்கு “கேள்வியின் நாயகன்” என்ற ஒரு பெயரும் உண்டு.

புரட்டாசி மாதம் ஏன் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது?? அறிவியலும், ஆன்மீகமும்!!

தற்போது தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு பற்றி பல கருத்துக்கள் எழுந்து வருகின்றனர். பெரியார் அந்த காலத்திலேயே மும்மொழி கொள்கைக்கு எதிராக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது ஹிந்தி என்பது மொழி தான். ஆனால், அந்த மொழியினை அடிப்படையாக கொண்டு கலாச்சாரத்தை திணிப்பது தான் தவறு” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 2

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 2 https://www.youtube.com/watch?v=dFhDzUKf_x4 Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -