Saturday, October 24, 2020

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா?? முதல்வர் இன்று ஆலோசனை!!

Must Read

வனிதா பீட்டர் பால் விவகாரம் – ரவீந்தரை விட்டு விளாசிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருப்பது வனிதா பீட்டர் பால் பிரேக்கப் தான். தற்போது பலரும் கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது...

யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் – வெளியான புகைப்படம்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி மக்களிடையே அதிக புகழ் பெற்றவர். மேலும் அவர் வெளியிட்ட...

லேடி சூப்பர்ஸ்டாரின் “மூக்குத்தி அம்மன்” தீபாவளிக்கு ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் "லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் ஆர்.ஜெ.பாலாஜி...

தமிழகத்தில் நாளையுடன் (செப்.30) ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு?

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் கடுமையாக விதிகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் உரிய வருமானம் இன்றி பாதிக்கப்பட்ட காரணத்தால் அதிக தளர்வுகள் வழங்கப்பட்டன. மாநிலம் முழுவதும் இதுவரை 5,86,397 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 9,383 பேர் உயிரிழந்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊரடங்கில் வழங்கப்பட்ட அதிகப்படியான தளர்வுகள் காரணமாக தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மறுபுறம் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி போன்றவற்றை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளையுடன் (செப்.30) ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. இதனால் ஊரடங்கை மேலும் சில தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் காணொளி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Conference
Conference

அதன் பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர், தலைமை செயலாளர் உட்பட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி – தொண்டர்கள் அதிர்ச்சி!!

இதனால் தியேட்டர்கள், மின்சார ரயில்கள் இயக்கம் மற்றும் கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு போன்ற தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை உட்பட பிற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

வனிதா பீட்டர் பால் விவகாரம் – ரவீந்தரை விட்டு விளாசிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருப்பது வனிதா பீட்டர் பால் பிரேக்கப் தான். தற்போது பலரும் கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது...

யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் – வெளியான புகைப்படம்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி மக்களிடையே அதிக புகழ் பெற்றவர். மேலும் அவர் வெளியிட்ட போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலானது....

லேடி சூப்பர்ஸ்டாரின் “மூக்குத்தி அம்மன்” தீபாவளிக்கு ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் "லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் ஆர்.ஜெ.பாலாஜி தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும்...

அர்ச்சனாவின் முகத்திரையை கிழிக்கும் பாலாஜி முருகதாஸ் – தெறிக்கும் ப்ரோமோ!!

பிக் பாஸ் சீசன் 4 இல் தற்போது மூன்றாவது வாரம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் பல டாஸ்க்குகளை கொடுத்து ஹவுஸ் மேட்ஸ் இடையே பல சண்டைகள் ஏற்படுத்தி வருகிறார்....

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்தா?? சிபிஎஸ்இ விளக்கம்!!

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட உளளதாக வெளியான தகவல் போலியானது என சிபிஎஸ்இ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும்...

More Articles Like This