தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு?? வெளியான தகவல்!!

0
lock down
lock down

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் அக்டோபர் 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பிற நாடுகளில் தொற்று குறைந்து விட்ட நிலையில் இந்தியாவில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஊரடங்கு உத்தரவில் வழங்கப்பட்ட அதிகப்படியான தளர்வுகளே இதற்கு காரணம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் முடியவுள்ள ஊரடங்கை மேலும் சில தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Tamilnadu CM
Tamilnadu CM

இதில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்டோபர் 1 முதல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் பிற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகாது எனவும் தியேட்டர்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் அதனை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திரையரங்கங்களை திறக்க அனுமதிக்க கோரி தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனால் மேற்குவங்க மாநிலத்தில் அக்டோபர் 1 முதல் தியேட்டர்களை கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here