திருப்பதி கோவிலுக்கு 3 டன் காய்கறிகள் – நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்கள்!!

0

ஆந்திரா மாநிலத்தில் அமைந்திருக்கும் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக 3 டன் காய்கறிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காய்கறிகளை அந்த மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் வழங்கியுள்ளனர். இந்த செயலை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணமாக இருப்பார்கள். மேலும் அங்கு 3 வேலையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். இதற்காக பலர் நன்கொடையாக உணவிற்கு தேவையான பொருட்களை வழங்கி வருவார்கள். மேலும் இந்த பொருட்களை திருமலை தேவஸ்தானம், ஏழுமலையான் பெயரில் அறக்கட்டளை நடத்தி நன்கொடை பொருட்களை பெற்று வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இஸ்லாமியர்கள் வழங்கிய நன்கொடை:

தற்போது இதில் அனைவரும் ஆச்சர்ய படும் வகையில் ஓர் அறிய சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கேஜி கண்டறிக பகுதியில் சிலர் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். அங்கு வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே. தற்போது அங்குள்ள இஸ்லாமியர்கள் சிலர் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு சுமார் 3 டன் அளவிலான காய்கறிகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுமபத்திற்கு ரூ. 2.5 லட்சம் இழப்பீடு – முதல்வர் அறிவிப்பு!!

இதுகுறித்து கருத்து தெரிவித்த இஸ்லாமியர்கள் “பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கும் உணவு இறைவனுக்கு கொடுப்பது போன்றது” என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் குறித்து பல தரப்பினர் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த செயல் மூலம் இந்திய என்றும் ஒற்றுமை உள்ள நாடு எனவும், ஏழுமலையை தாண்டி மத நல்லிணக்கம் ஒளித்து வருகிறது என்றும் கூறி பலதரப்பினர் தங்களது மனமார்ந்த பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here