திருப்பதி ஏழுமலையான் கோவில் – விரைவு தரிசன டிக்கெட் அதிகரிப்பு!!

0

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலில் தற்போது பக்தர்களின் தரிசனத்துக்காக விரைவு டிக்கெட்டின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதி:

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வருகைக்கு கோவில் நிர்வாகம் பல விதிமுறைகளை விதித்தது. இதனால் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் கொரோனா பரவல் காரணமாக விரைவு தரிசனத்திற்கான டிக்கெட்டை நாள் ஓன்றுக்கு 20 ஆயிரம் வரை வழங்கி வந்தனர். இதனை தேவஸ்தானம் இணையதளம் மூலம் பதிவு செய்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆன்லைன் வகுப்புகள் புரியாததால் பள்ளி மாணவன் தற்கொலை – சென்னையில் நடந்த துயரம்!!

மேலும் இதன் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 என்றும் நிர்ணயித்தனர். தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனை முன்னிட்டு கோவில் தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களின் தினசரி தரிசனத்தின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்தனர். இதன் மூலம் இதுவரை நாள் ஒன்றுக்கு 20,000 வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி நாள் ஒன்றுக்கு 25,000 பக்தர்கள் வரை அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் விரைவு தரிசனத்திற்காக டிக்கெட்டின் எண்ணிக்கையை கோவில் நிர்வாகம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here