தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

0

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வெளியாகியுள்ளது. நேற்றைய விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் வீதம் உயர்ந்து சற்று கூடுதலாக விற்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் எண்ணெய்களின் விலை உயரத்தை சந்தித்து வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதன் தேவைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்களால் மாற்றப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் முதல் மாற்றம் கண்டு வந்த எண்ணெயின் விலை கடந்த பிப்ரவரி 4ம் தேதி முதல் படிப்படியாக, உயரத்தை எட்டியுள்ளது. வாகனங்களுக்கான எரிபொருள்களின் தேவைக்கேற்ப மாறி வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டுமாக உச்சத்தை எட்டியிருக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள்கள் விலை வாகன ஓட்டிகளை பெரும் அவதிக்குள்ளாக்கியிருக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் நேற்றய நிலைப்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் 90.18 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 83.18 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மீண்டுமாக இன்று காலை வெளிவந்த இன்றைய விலைப்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 90.44 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 83.52 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here