சர்வதேச T20 யில் இப்படி ஒரு சாதனையா?? இதிலும் முதலிடம் பிடித்து அசத்திய கேப்டன்!!

0
சர்வதேச T20 யில் இப்படி ஒரு சாதனையா?? இதிலும் முதலிடம் பிடித்து அசத்திய கேப்டன்!!
சர்வதேச T20 யில் இப்படி ஒரு சாதனையா?? இதிலும் முதலிடம் பிடித்து அசத்திய கேப்டன்!!

சர்வதேச அளவிலான கிரிக்கெட் அணிகள் அனைத்தும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான தொடரிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த வகையில், நியூசிலாந்து அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக தலா 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டியில், நியூசிலாந்து அணி தோல்வியை தழுவினாலும் அணியின் கேப்டன் டிம் சவுத்தி வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, மிக குறுகிய வடிவிலான டி 20 அரங்கில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை எட்டி உள்ளார். இதுவரை இவர், 108 இன்னிங்ஸில் களமிறங்கி 141 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் இந்த சாதனை படைத்துள்ளார். இவரை தொடர்ந்து, பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 115 இன்னிங்ஸில் விளையாடி 140 விக்கெட்டுகளை கைப்பற்றி 2 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் அரங்கில் சாதனை படைத்த பாகிஸ்தான்…, கேப்டன் மாற்றத்தால் நிகழ்ந்த சரித்திர பட்டியல் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here