ஒருநாள் அரங்கில் சாதனை படைத்த பாகிஸ்தான்…, கேப்டன் மாற்றத்தால் நிகழ்ந்த சரித்திர பட்டியல் இதோ!!

0
ஒருநாள் அரங்கில் சாதனை படைத்த பாகிஸ்தான்..., கேப்டன் மாற்றத்தால் நிகழ்ந்த சரித்திர பட்டியல் இதோ!!
ஒருநாள் அரங்கில் சாதனை படைத்த பாகிஸ்தான்..., கேப்டன் மாற்றத்தால் நிகழ்ந்த சரித்திர பட்டியல் இதோ!!

ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் நேற்று முதல் கோலாகலமாக தொடங்கி உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில், நேபாளம் அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி அதிரடியாக பேட்டிங் செய்து 342 ரன்கள் குவித்திருந்தது. இதில், பாபர் அசாம் (151) மற்றும் இப்திகார் அகமது (109*) சதங்களை விளாசி அசத்தி இருந்தனர். கடின இலக்கை துரத்திய நேபாளம் அணியோ 104 ரன்களுக்குள் சுருண்டு 238 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் மூலம், ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இந்த போட்டியில், அதிரடியாக விளையாடிய பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். இந்த விருதின் மூலம், இதுவரை 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய பாபர் அசாம் தனது 13 வது ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் பாபர் அசாம் சரித்திரம் படைத்துள்ளார்.

அதாவது,

  • பாபர் அசாம் தலைமையில் ஐசிசியின் நம்பர்.1 ஒருநாள் அணியாக பாகிஸ்தான் மாறி உள்ளது.
  • ஆசிய கோப்பையில் கேப்டனாக (151) அதிக ஸ்கோர் எடுத்துள்ளார்.
  • ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. (238 ரன்கள் வித்தியாசம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here