என் புருஷன் தப்பு செஞ்சதுக்கு காரணமே நீங்க தான்.., கோதை. நடேசன் மீது பழியை சுமத்திய ராகினி!!!

0
என் புருஷன் தப்பு செஞ்சதுக்கு காரணமே நீங்க தான்.., கோதை. நடேசன் மீது பழியை சுமத்திய ராகினி!!!
என் புருஷன் தப்பு செஞ்சதுக்கு காரணமே நீங்க தான்.., கோதை. நடேசன் மீது பழியை சுமத்திய ராகினி!!!

தமிழும் சரஸ்வதியும் சீரியல் இன்றைய எபிசோடில் சரஸ்வதி, கோதை எல்லோரும் அர்ஜுன் தமிழ் மீது சுமத்திய கொலை பழியை வீடியோ ஆதாரத்தின் மூலம் பொய் என நிரூபிக்கின்றன. இந்த உண்மை தெரிந்து கார்த்திக் அர்ஜுனிடம் உன்ன போய் நம்புனேன் என அடி வெளுத்து வாங்குகிறார். கோதை பத்து மாதம் சுமந்த பிள்ளையை நம்பாமல் உன்னை நம்பினேன். ஆனால் இப்படி நம்பிக்கை துரோகம் பண்ணிட்டியே என சத்தம் போடுகிறார். பின் ராகினியிடம் நீ தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்ல எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியும் என்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை கேட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியாக அப்புறம் ஏன் அமைதியாக இருந்த என்று கேட்க அர்ஜுன் தப்பு செஞ்சதுக்கு காரணமே நீங்கதான் என கோதை நடேசன் மீது பழியை தூக்கி சுமத்துகிறார். பின் தான் அர்ஜுன் ராகினியிடம் நான் உங்க குடும்பத்தை பழிவாங்க தான் இந்த வீட்டுக்கு வந்தேன். அதற்கான காரணத்தையும் சொல்லிவிட்டார் என்று தெரிகிறது. இதனால் ராகினி அர்ஜுன் மீது எந்த தவறும் இல்லை என புரிந்து கொள்கிறார். மேலும் குடும்பத்தில் உள்ள உள்ளவர்கள் எவ்வளவு சொல்லியும் அர்ஜுன் மீது எந்த தவறும் இல்லாத மாதிரி பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here