திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி திருவிழா கொண்டாட்டம் – நீதிமன்றம் அனுமதி!!

0

இந்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் சனிப்பெயர்ச்சி விழாவை தொடர்ந்து திருநள்ளாறு கோவிலில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விழாவை கொண்டாட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும் விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளது.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி:

இந்த வருடத்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சில தளர்வுகளால் கோவில்கள், திரையரங்குகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கும் சில நெறிமுறைகள் விதிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றியே கோவில்களுக்கு சென்று வருகின்றனர் பக்தர்கள். இந்த கொரோனாவால் எத்தனையோ வருடங்கள் நடந்த சித்திரை திருவிழாவே முதல் முறையாக நடக்காமல் போனது. இந்நிலையில் வருகிற 27 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாற்றில் நடக்கவுள்ளது.

டிசம்பர் 27 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை இந்த திருவிழாவை நடத்த அறநிலையத்துறை முடிவெடுத்தது. ஆனால் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் கோவிலில் நீராட அனுமதியில்லை என்பதையும் புதுச்சேரி அறநிலையத்துறை அறிவித்தது. இந்த திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி !!

இதனால் ஸ்தானிகர் சங்க தலைவர் நாதன் என்பவர் இந்த திருவிழாவிற்கு அனுமதி வழங்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் சனீஸ்வர பகவான் கோயில் தனி அதிகாரியான அர்ஜுன் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் டிசம்பர் 27 ஆம் தேதி நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சி விழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தீர்த்தங்களில் நீராட தடைவிதித்துள்ளோம்.

மேலும் வரிசை 3 கி.மீ வரை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூக இடைவெளியில் தான் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள், கோவிலின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் விழாவை நடத்த உத்தரவிட்டனர். மேலும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here