ஷாருக்கானாக மாறிய டேவிட் வார்னர் – வைரலாகும் வீடியோ!!

0

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் வார்னர் பேஸ் ஆப் மூலம் தன்னை ஷாருக்கானாக மாற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியகி வைரலாகி வருகிறது.

டேவிட் வார்னர்:

இந்த கொரோனா காலங்களில் இருந்தே ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னர் பாலிவுட் பாடல்களுக்கு தனது குடும்பத்தோடும் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வந்தது. இதனால் வார்னர் இந்தியாவில் மிகவும் பிரபலமானார். தற்போதும் அதே போல் ஓர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஹிந்தி உலகின் சூப்பர் ஸ்டார் தான் ஷாருக்கான். இவர் டான் 2 என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் வரும் சண்டை காட்சி அனைவராலும் கவரப்பட்டது. இதனை பார்த்த வார்னர் பேஸ் ஆப் மூலம் அந்த சண்டை காட்சியில் ஷாருக்கான் முகத்திற்கு பதில் இவரது முகத்தை பதித்து ஓர் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது இவரது ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேலும் “இதில் உள்ள வன்முறைக்காக என்னை மன்னிக்கவும். ஆனால் இதை செய்வேன் என நானே நினைத்ததில்லை” என கேப்ஷன் போட்டுள்ளார் வார்னர். தற்போது இந்த வீடியோவை சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோவிற்கு லைக் மற்றும் கமெண்ட் குவிந்த வண்ணமாக உள்ளது. இவர் காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத நிலையில் தனது நேரங்களை இந்த வழியில் செலவழித்து மகிழ்ந்து வருகிறார். இந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here