வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி – ராகுல் காந்தி கைது!!

0

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்கின்றனர். இதனையடுத்து ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உட்பட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வேளாண் சட்டம்:

மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெற கூறி டெல்லியில் விவயசாயிகள் தொடர்ந்து 29வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கூறி கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி அன்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் தரப்பினர், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். மேலும் பலமுறை மத்திய அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பி.,க்கள் ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

திமுக.,வுடன் இணைய வாய்ப்பில்லை, புதிய கட்சி தொடங்கலாம் – சென்னையில் முக அழகிரி பேட்டி!!

மேலும் அவர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் திரட்டப்பட்ட 2 கோடி மக்களின் கையெழுத்தை ராகுல் காந்தி அவர்கள் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து கொடுக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு முன்பே அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே 144 தடை உத்தரவை மீறியதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்மல்ஏ.,கள் கைது செய்யப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here