
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் தான் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு சென்ற வெற்றியை அபி வெறுக்கிறார். மேலும் தன் குடும்பத்தை விட்டு பிரிந்த அபி தனது குழந்தையோடு வாழ்ந்து வருகிறார். மேலும் தருணை அபி திருமணம் செய்து கொண்டதாக கூறி வெற்றியை கண்மணி நம்ப வைத்து விட்டார். இருப்பினும் சுடர் மற்றும் வெற்றிக்கும் இடையில் இனம் புரியாத பந்தம் ஏற்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் வெற்றி ஒரு கொலைகாரன், அவனோடு நீ பேசக்கூடாது என சொல்லி சுடரை அபி மிரட்டுகிறார். அதையெல்லாம் கண்டுகொள்ளாத சுடர், சிம்பா மீது அளவுகடந்த அன்பை வைத்திருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் தற்போது இந்த சீரியலில் நியூ promo ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது இதுவரை சுடருக்கு body god டாக இருந்த வெற்றியை வெளியேற்றிய அபி, அவரை சந்திக்கவும் கூடாது என சுடரிடம் சொல்லிவிட்டார். இதனால் எப்படியாவது சிம்பாவை பார்க்க வேண்டும் என விஜிடம் சுடர் அடம் பிடிக்கிறார். அந்த நேரத்தில் பொம்மை போல் வேடமணிந்து வந்த வெற்றி சுடருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அவரை சந்தோசம் படுத்துகிறார்.இப்படியான அழகான காட்சிகளுடன் இந்த promo அமைந்துள்ளது.