உதயநிதியிடம் கைவரிசையை காட்டாத வடிவேலு.., இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா?

0
உதயநிதியிடம் கைவரிசையை காட்டாத வடிவேலு.., இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா?
உதயநிதியிடம் கைவரிசையை காட்டாத வடிவேலு.., இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை நகைச்சுவையில் முடிசூடா மன்னனாக ஜொலித்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு. தற்போது திரையுலகில் பல காமெடி நடிகர்கள் உருவெடுத்து இருந்தாலும், இவரின் நடிப்புக்கு யாராலையும் ஈடுகொடுக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த அளவுக்கு தனது நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். இப்படி காமெடியில் மதம் பிடித்த யானையாக சுற்றி திரிந்த இவர் சில தேவையில்லாத பேச்சுக்களாலும், நடவடிக்கைகளாலும் அடக்கி ஒடுக்கப்பட்டார். இதனால் 10 வருடங்கள் சினிமா பக்கம் எட்டி பார்க்காமல் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார்.

காதல் திருமணமாக இருந்தாலும், அதிலும் பிரச்சனைதான்., marriage life குறித்து மனம் திறந்த ஜிவி.பிரகாஷ் மனைவி!!

இருப்பினும் தற்போது வரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டாக செல்வது, சம்பள விஷயத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவது என தொடர்ந்து எல்லா இயக்குனர்களிடம் இருந்து தவறான பெயர்களை குவித்து வருகிறார். ஆனால் மாமன்னன் படத்தில் மட்டும் அவரின் கை வரிசையை காட்டாமல் இருந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணம் உதயநிதி ஸ்டாலின் தான். ஏனென்றால் வடிவேலு மீது இருந்த நடிகை சங்க பிரச்சனைகளை பஞ்சாயத்து பண்ணி தீர்த்து வைத்தது உதயநிதி ஸ்டாலின் தான்.

இதனால் தான் இந்த படத்தில் மட்டும் அதிக பொறுப்புடன் நடந்து வருகிறார். மேலும் இந்த படம் தான் உதயநிதி கடைசி படம் என்பதால், வடிவேலு கைவரிசையை காட்டாமல் ஒழுங்காக நடித்து, அவரை கைக்குள் போட்டுக் கொள்ள திட்டம் தீட்டியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் வைகைப்புயல் வில்லன் ரோலில் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here