
இந்திய திரையுலகில் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என ஏகப்பட்ட திறமைகளுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் GV. பிரகாஷ். இவரது தனித்துவமான குரலால் எக்கசக்க பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார். மேலும் பின்னணி பாடகி சைந்தவியை பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த இவர் திருமணம் செய்து கொண்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதோடு இவர்களின் காமினேஷனின் வெளியான பல டூயட் பாடல்கள் காதல் ஜோடிகளின் FAVOURITE லிஸ்டில் இன்றும் இடம்பெற்று வருகிறது. மேலும் இசைத்துறையில் கலக்கி வந்த GV ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் தனுஷின் ‘வாத்தி’ திரைப் படத்திற்கு இசையமைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
ஜெய்யுடன் குடும்ப நடத்திய அஞ்சலி.., குடியால் அனுபவித்த மனவேதனை.., பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்!!
இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவரது மனைவி சைந்தவி அண்மையில் பேட்டி ஒன்றில் தன் திருமண வாழ்க்கை குறித்து சில சுவாரசியமான விஷயங்களை ஷேர் செய்துள்ளார். அதாவது என்னதான் இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டாலும் இவர்களுக்குள் அவ்வப்போது சண்டைகள் வருமாம். ஆனால் அந்த சண்டையை பெரிதாக்காமல் ஈகோவை விட்டு ஜிவியிடம் சைந்தவி மன்னிப்பு கேட்பாராம். இப்படி தான் இவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து வருவதாக சைந்தவி கூறியுள்ளார்.