தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய முறை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய முறை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய முறை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் நியாயமாக தேர்தல் நடைபெற தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் போது அதில் புதிய முறையை பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையர்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் நிறுவப்பெற்ற அமைப்பு தான் இந்திய தேர்தல் ஆணையம் ஆகும். இதன் முக்கிய பணி நாடு முழுவதும் தேர்தல் நடத்தி சரியான தலைவரை தேர்வு செய்வது தான். அத்தகைய முக்கியமான பணியை செய்யும் தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரை சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வது போல தேர்வு செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 31ம் தேதிக்குள் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்கள் – முழு விவரம் உள்ளே!

அதன் படி பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர், ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற புதிய முறையை நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் இது குறித்து விளக்கம் கொடுத்த உச்சநீதிமன்றம், நியாயமாக தேர்தல்கள் நடைபெற தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என தெரிவித்துள்ளது. மேலும் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பெரிய கட்சியின் தலைவர் குழுவில் இடம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here