மார்ச் 31ம் தேதிக்குள் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்கள் – முழு விவரம் உள்ளே!

0
மார்ச் 31ம் தேதிக்குள் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்கள் - முழு விவரம் உள்ளே!
மார்ச் 31ம் தேதிக்குள் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்கள் - முழு விவரம் உள்ளே!

தற்போது மார்ச் மாதம், நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் இம்மாதத்தில் நீங்கள் ஒரு சில விஷயங்களை கட்டாயமாக செய்ய வேண்டியது அவசியமானதாகும். இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

நிதியாண்டு

தற்போது மார்ச் மாதம் தொடங்கிய நிலையில், மார்ச் 31ம் தேதிக்குள் நீங்கள் என்னவெல்லாம் செய்து முடிக்க வேண்டியிருக்கும் என்பது குறித்து பார்ப்போம். அந்த வகையில், ஆதாருடன் பான் எண்ணை மார்ச் 31ம் தேதிக்குள் நீங்கள் இணைத்திருக்க வேண்டும். இல்லையெனில் உங்களின் பான் செல்லாததாகிவிடும். அத்துடன் உங்களால் வருமான வரி செலுத்த முடியாது.

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் Attendance அறிமுகம்., இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!!

இதை தொடர்ந்து, மத்திய அரசின் வய வந்தனோ யோஜனா திட்டத்தில் நீங்கள் இம்மாத இறுதிக்குள் இணைய வேண்டும். இத்திட்டத்திற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, இந்த நிதியாண்டில் வரி சேமிக்க நினைத்தால் இம்மாத இறுதிக்குள் NPS, PPF, செல்வ மகள் திட்டம் உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யுங்கள்.

மேலும் மத்திய பட்ஜெட்டில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வருடாந்திர பிரீமியம் கொண்ட LIC பாலிசிக்கு வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் வரி விலக்கு பலன் வழங்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதனால் இத்திட்டத்திலும் இம்மாத இறுதிக்குள் இணைய விரும்பும் நபர்கள் உடனே இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here