சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி.. போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது – மதுரை உயர் நீதிமன்றம்..!

0
Madurai High court
Madurai High court

சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழந்த வழக்கில் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.

போலீசார் மீது வழக்கு பதிவு..!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் வழக்கில் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்வில்லை தந்தை மற்றும் மகன் உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது என்று மதுரை உயர்நீதிமன்ற கூறியுள்ளது.

சிபிஐ விசாரணையை தொடங்கும் முன் இந்த வழக்கை விசாரிக்கப் போவது யார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்து 4 வாரத்தில் விளக்கம் அளிக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தடவியல் நிபுணர்கள் ஆய்வு..!

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் காவல் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நீதிமன்ற உத்தரவின்படி தடயங்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் செயல்பட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செந்தூர்ராஜன் காவல் நிலைய பொறுப்பாதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை தாசில்தார் சாமிநாதன் ஆகிய இருவரும் சேர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்க பணியில் இருப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here