Monday, May 13, 2024

60% வெட்டுக்கிளிகளை ட்ரோன் மூலம் அழித்த வேளாண் அதிகாரிகள் – மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

Must Read

வெட்டுக்கிளிகளுக்கு முடிவுக்கட்டும் விதமாக வேளாண் அதிகாரிகள் ட்ரோன் மூலம் பூச்சி மருந்தினை தெளித்து அசத்தலாக 60 % வெட்டுக்கிளிகளை அழித்து உள்ளனர்.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு:

கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு வெட்டுக்கிளிகள் பரவி வந்தது. இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 150 கிலோமீட்டர் வரை பறக்கும் வல்லமை பெற்றதாக இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

locusts attack
locusts attack

இது ஈரான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உருவாகி இப்படி பரவி வருகிறது. இந்த வெட்டுக்கிளிகள் சிறிது நேரத்திலேயே பல லட்சம் பயிர்களை நாசம் செய்யும் ஆற்றல் பெற்றதாக இருந்து வந்தது.

Desert Locust
Desert Locust

இதனால் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருந்தது. இதனால் விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாகி வந்தனர். அதிகாரிகளும் தங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.

புது முயற்சி:

இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உத்தர பிரதேச வேளாண் அதிகாரிகள் புதிய முயற்சியாக பறக்கும் ட்ரோன் மூலம் பூச்சி மருந்தினை தெளிக்க முடிவெடுத்தனர். அதனை செயல்படுத்த ஆக்ரா பகுதியில் மத்திய அரசு வழங்கிய 4 ட்ரான் கருவிகள் மூலம் பூச்சி மருந்து தெளிக்க பட்டது.

சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ‘புதிய வகை பன்றிக் காய்ச்சல்’ – மேலும் ஒரு தொற்றுநோய்?

 locust control operations, drones spray
locust control operations, drones spray

பூச்சிக்கொல்லி தெளிப்பதற்காக தீயணைப்பு படைகள், கண்காணிப்பு சாதனங்கள், ஸ்பிரே சாதனத்துடன் கூடிய கட்டுப் பாட்டு வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்படி தெளித்ததன் மூலம், ஆக்ரா பகுதியில் 60 % வெட்டுக்கிளிகள் கொல்லப்பட்டன.

Locust were died
Locust were died

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் இன்று வெட்டுக்கிளிகள் காணப்பட்டதால் அதிகாரிகள் துரிதமாக இந்த வேலையில் ஈடுபட்டு வெற்றியும் அடைந்து உள்ளனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -