ஊரடங்கால் பரிதவிக்கும் லாரி ஓட்டுனர்கள் – கோரிக்கை நிறைவேறுமா.?

0

நாடெங்கிலும் கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும் எனவும், காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்க வேண்டும் எனவும் அனைத்திந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் 350ஐத் தாண்டிவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக மேலும் மே 3ஆம் தேதி வரையில் மக்கள் ஊரடங்கைக் கடைபிடிக்க வேண்டும் எனவும், ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு சில தளர்வுகள் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி இன்று அறிவித்தார். இந்த நிலைமையில் இந்த அறிவிப்பால் தங்களுக்கு இழப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாகவும், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தகுந்த ஆதரவும் நிவாரணமும் தேவை எனவும் அனைத்திந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

மோட்டார் வாகன கூட்டமைப்பு

இதுகுறித்து அனைத்திந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்கள் காவல் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுவதாகவும், வண்டிகளில் செல்லும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உணவுகூட கிடைப்பதில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளது. கொரோனா பீதியையும் தாண்டி நாட்டு மக்களுக்காக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்களையும் கொரோனாவுக்கு எதிரான போராளிகளாகப் பாவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.”

samayam tamil

இந்தியாவில் தற்போது சுமார் 90 சதவீத லாரிகள் இயங்காமல் முடங்கியிருக்கும் நிலையில், ஊரடங்கு காலத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஒரு லாரிக்கு 2,200 ரூபாய் என, சுமார் ரூ.35,200 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அயராது பணியாற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்கள், உள்ளிட்ட ஊழியர்களுக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும் என்று இக்கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

2022 வரை சமூக இடைவெளி அவசியம் – ஹார்வர்டு பல்கலை ஆய்வில் தகவல்..!

பரிதவிக்கும் லாரி ஓட்டுநர்கள்_ நிவாரணம் கிடைக்குமா

ஒரு லாரியில் ஓட்டுநர் உட்பட ஐந்து பேரை அனுமதிக்குமாறும், தகுந்த சோதனைகள் செய்து லாரிகள் சரக்குகளை ஏற்றிச் செல்ல விரைந்து அனுமதி வழங்குமாறும் அனைத்திந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு அரசிடம் முறையிட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here