தி  பேமிலி மேன் சீரிஸின் புதிய சீசன்: பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 4 இல் வெளியீடு!!!

0

பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவான ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸின் புதிய சீசன் அமேசான் பிரைமில், ஜூன் 4-ம் தேதி கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தி பேமிலி மேன் வெப் சீரிஸின் முதல் சீசன் 2019 ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த சீரிசில், மனோஜ் பாஜ்பாயி, சந்தீப் கிஷன், பிரியாமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து, பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பின்னர்  தி பேமிலி மேன் வெப் சீரிஸின் புதிய சீசனின் ட்ரைலர் மே 19-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.இதில் நடித்துள்ள சமந்தா இலங்கையில் இருந்து வந்த தமிழ் பெண்ணை போல காட்டப்பட்டுள்ளார். சமந்தாவை தமிழ் பேச கூடிய தீவிரவாதி போல இதில் சித்தரித்துள்ளனர் என்ற கண்டனங்களும் எழுந்தது.

தி பேமிலி மேன் 2 தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. இதையடுத்து நாங்கள் தமிழர்களின் உணர்வுக்கும், கலாச்சாரத்துக்கும் மதிப்பளிக்கிறோம் என ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே அறிக்கை வெளியிட்டனர்.இந்நிலையில் ஜூன் 4 ஆம் தேதி கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி பேமிலி மேன் படத்தின் புதிய சீசன் வெளியாக உள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here