புலம்பெயரும் தொழிலாளர்கள் – எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவு..!

0

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரு நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருப்பதால் சமூக பரவலை தடுக்க அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் – புலம்பெயரும் தொழிலாளர்கள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1024 ஆக உயர்ந்துள்ளது. இதில் 27 பேர் பலியாகிவிட்டனர்.


இதனிடையே வேலையில்லாமலும் பணமில்லாமலும் அவதிப்பட்டு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்று வருகிறார்கள்.

கவலைப்படும் மக்கள் – மத்திய அரசு அறிக்கை..!

நாங்கள் இங்கேயே இருந்தால் வைரஸ் கொல்வதற்கு முன்னர் பசியாலேயே செத்துவிடுவோம் என்கிறார் ஒரு புலம்பெயர்ந்த தாய்.

இவர்கள் எல்லோரும் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே செல்கிறார்கள். இவர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருந்தாலும் அது மிகவும் ஆபத்தில்தான் முடியும். அதோடு மருத்துவ வசதிகளே இல்லாத சொந்த மாநிலங்களுக்கும் நோயை இவர்கள் கொண்டு செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே கொரோனா வீரியத்தை உணர்ந்த மத்திய அரசு, அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூடுமாறு மாநில அரசு, யூனியன் பிரதேசங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here