மேஜிக் புல்லட், தடுப்பூசி எதுவும் இல்லை, லட்சக்கணக்கில் மக்கள் சாகப் போகிறார்கள் – எச்சரிக்கும் அமெரிக்க வெள்ளை மாளிகை..!

0

உலகெங்கிலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. கொரோனா வைரஸ் பரவலின் வேகம், அதன் தன்மை ஆகியவற்றைக் கொண்டு கணித்து மாதிரியில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவிக்கும் போது சுமார் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அமெரிக்காவில் பலியாவதை நாம் எதிர் கொள்ளவுள்ளோம்என்று தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை கரோனா ரெஸ்பான்ஸ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பிரிக்ஸ் கூறும்போது, “மந்திர புல்லட் இல்லை, மந்திர வாக்சைனும் இல்லை. நம் நடத்தைகள்தான் தீர்மானிக்கிறது. நம் ஒவ்வொருவரின் நடத்தையும் வேறு ஒன்றாக மாற்றமடைந்து அது இந்த வைரஸின் நடத்தையை தீர்மானிக்கிறது, இதுதான் அடுத்த 30 நாட்களுக்கான நிலவரம்.” என்றார்.

இன்றுடன் ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு..!

இதை பற்றி மற்றொரு டாக்டர் ஆண்டனி ஃபாஸி கூறும்போது, “அமெரிக்கர்கள் பெரிய அளவிலான மரண எண்ணிக்கைக்கு தங்கள் மனதை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இது கணிப்புதான் ஆனாலும் அதுதான் நிலைமை. நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். இதைத்தான் நாம் எதிர்பார்க்க வேண்டும். ஆனால் இதுதான் நடக்கும் என்று நாம் ஏற்று கொள்ள வேண்டியதில்லை, நாம் இதனை முடிந்தவரையில் தடுக்கப் பாடுபடுவோம்” என்றார்.

நியூயார்க், நியுஜெர்சி, கனெக்டிகட் ஆகிய இடங்கள் வைரல் சுமை அதிகமாக உள்ளது. சுகாதார அளவியல் மற்றும் மதிப்பிட்டு நிறுவனமான IHME ஆகஸ்ட் தொடக்கத்தில் அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 84,000த்தை தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 முதல் தினசரி ஏற்பட்டு வரும் மரண எண்ணிக்கையிலிருந்து இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது.

சமூக விலகல்

அமெரிக்க மக்கள் எங்கு சென்றாலும் 6 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் முழு அடைப்பை பரிந்துரை செய்யவில்லை. 6 அடி இடைவெளி விட்டால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்” என்று டாக்டர் பர்க்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதா கொரோனா வைரஸ்..? மத்திய அரசு விளக்கம்..!

இத்தாலியை உதாரணம் காட்டிய டெபோரா பர்க்ஸ் “புதிய தொற்றுகள் அங்கு குறைந்து வருகின்றன. ஒரு சமூகமாக விலகலைத் தொடர்ந்து கடைபிடிப்பதன் பலன்களை அவர்கள் உலகுக்குக் காட்டியுள்ளனர்” என்று அமெரிக்கர்களுக்கும் சுய-கட்டுப்பாட்டை வலியுறுத்தினார்.சமூக விலகல் என்ற ஒற்றை மந்திரமே ஒரே வழி, இதுதான் மருந்து என்று டாக்டர் ஃபாஸி தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here