10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற கிளை..!

0

தற்போது வரும் 15 ஆம் தேதி நடத்தப்பட உள்ள பொது தேர்வுகளை தள்ளிவைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த தீர்ப்பு இன்று வெளியானது.

பொது தேர்வு

தற்போது கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பொது தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

TN to conduct public exam for Class XI students - The Hindu ...

அதனை தொடர்ந்து வரும் 15 ஆம் தேதியில் பொது தேர்வுகள் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

மனுதாக்கல்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இத்தேர்வை தள்ளி வைக்க கோரி தென்காசியை சேர்ந்த கனகராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

10 Interesting Facts About Supreme Court of India

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற தீர்ப்பு

அந்த நீதிமன்ற தீர்ப்புகள் வெளியானது, அதில் நீதிபதிகள் கருத்துக்களை வெளியிட்டன. அதில் அவர் கூறியதாவது, “மனுதாரர் கூறியபடி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே பிரச்னை உள்ளது. எனினும் தேர்வை ஒத்தி வைப்பது மாணவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், மாணவர்கள் நலன் கருதியே 10-ம் வகுப்பு தேர்வு நடத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது.

Virtual courts: How real? - The Sunday Guardian Live

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here