கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக தஞ்சையில் பள்ளி கல்லூரிகளுக்கு அபராதம் – அரசு அதிரடி நடவடிக்கை!!

0

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதை அடுத்து கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் கொரோனா விதிமுறையை பின்பற்றாததால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அபராதம்

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா நோய் தொற்றால் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏறக்குறைய எட்டு மாதங்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் மீண்டுமாக பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கியது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக இந்தியாவில் மீண்டுமாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏப்ரல் 1 முதல் அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!

அந்த வகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரவியது. அதன்படி சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினால் கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டங்களில் இயங்கி வந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு 5,000 முதல் 12,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தாத, தஞ்சையில் உள்ள 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு ரூ 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here