‘என்ன புகழ் யாஷிகாவா இப்படிலாம் பண்றீங்க’ – நொந்து போன “முரட்டு சிங்கிள்ஸ்”

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி தான், முரட்டு சிங்கிள்ஸ். இந்த நிகழ்ச்சியில் தற்போது “குக் வித் கோமாளி” பிரபலமான புகழ் தற்போது பங்கு பெற்றுள்ளார். அவர் நடிகை யாஷிகாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் மக்களை மகிழ்விக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது “முரட்டு சிங்கிள்ஸ்” இந்த நிகழ்ச்சியில் பல நடிகைகள் மற்றும் பிரபலமானவர்கள் பங்கு கொண்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் சின்னத்திரை நடிகைகளும் பங்கு பெற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மற்ற டான்ஸ் அல்லது பாட்டு நிகழ்ச்சியினை போல் அல்லாமல் வித்தியாசமானதாக இருக்கும். இதில் முரட்டு சிங்கிள்ஸ் என்று இளைஞர்களை பிரித்து வைத்து இருப்பர். அவர்கள் நடிகைகளை தங்களது திறமைகள், நகைச்சுவை, காதல் இவற்றின் மூலமாக தங்கள் வசம் இழுக்க வேண்டும்.

இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்படும். கடந்த வாரம் நடிகைகளின் அம்மாக்கள் கலந்து கொண்டனர். அவர்களின் கவனம் பெற ஹீரோக்கள் குட்டிக்கரணம் அடித்து கொண்டு இருந்தனர். இப்படியாக இருக்க, இந்த வாரம் சிறப்பு விருந்தினராக “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான புகழ் கலந்து கொள்ள இருக்கிறார்.

ஏப்ரல் 1 முதல் அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!

இதனை அடுத்து இந்த வாரம் செம்ம கலாட்டாவாக தான் இருக்கும். புகழ் அனைத்து பெண்களிடமும் வழிந்து கொண்டு பேசுகிறார். இதனை பொறுக்காத இளைஞர்கள் அவரிடம் கெஞ்சுகின்றனர். குறிப்பாக, புகழ் நடிகை யாஷிகாவை கொஞ்சி கொண்டும் கட்டி பிடித்துக்கொண்டும் இருக்கிறார். நாளைய எபிசொட் செம்ம மஜாவாக தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here