ஏப்ரல் 1 முதல் அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!

0

இந்தியாவில் தற்போது கொரோனவால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் மக்களின் அத்யாவசிய தேவைகளின் விலையும் அதிகரிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா:

கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் மக்கள் பலரும் தங்களது வேலையை இழந்து தங்களது வாழ்வாதாரத்தையே இழந்தனர். பின்பு கொரோனா குறைந்து அனைத்து துறைகளும் பணிகளை துவங்கினாலும் சிலர் வேலையில்லாமல் தான் தவித்து வந்தனர். மேலும் தற்போதைய காலங்களில் பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றையின் விலை எதிர்பாராத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வரும் காலங்களில் கச்சா எண்ணையின் விலை உயரும் என்றும் அதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுக்களின் விலையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த வகையில் மக்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போதைய காலங்களில் உற்பத்திக்கான செலவுகள் அனைத்தும் அதிகரித்து வருவதால் இதன் எதிரொலியாக வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் கார், பைக், ஸ்மார்ட்போன், டிவி, ஏசி பிரிட்ச் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கவுள்ளதாம்.

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

அதுவும் இதுபோன்ற பொருட்களின் விலை சுமார் ரூ.4,000 வரை அதிகரிக்கவுள்ளது. இதனை தொடர்ந்து விமான கட்டணம், மின் கட்டணம் மற்றும் பால் போன்றவற்றிற்கு விலையும் அதிகரிக்கவுள்ளதாம். இதனால் மக்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே நாட்டு மக்கள் கொரோனவால் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது இந்த செய்தி வருவது வேதனைக்குரியதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here