
தமிழும் சரஸ்வதியும் சீரியல் இன்றைய எபிசோடில் கோதை தன் பண்ண தப்பை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் நடேசன் வர நான் பண்ண தப்புனால தான் நம்ம பிள்ளைங்க இன்னைக்கு இவ்வளவு கஷ்டப்படுறாங்க என்று சொல்லி அழுகிறார். மேலும் தமிழில் பேசாததை நினைத்து புலம்புகிறார். அந்த நேரத்தில் தமிழ் வந்து விட கோதையும் நடேசன் எதுவும் பேசாமல் கீழே சென்று விடுகின்றனர். பின் தமிழ் இடம் சரஸ்வதி எதுக்கு இப்படி பண்றீங்க. அத்தை இடம் பேச வேண்டியதுதானே என்று சொல்ல எல்லாம் எனக்குத் தெரியும் உன் வேலையை பாரு என்று சத்தம் போடுகிறார் தமிழ்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த நேரத்தில் வசுந்தரா எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என சரஸ்வதிக்கு ஆறுதல் கூறுகிறார். பின் எல்லோரும் தூங்கச் செல்ல மறுநாள் தன் பிள்ளைகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் கஷ்டப்படுவதை பார்த்து கோதை கண் கலங்குகிறார். அடுத்ததாக தமிழ் நமச்சியிடம் இந்த வீடு எல்லாத்துக்கும் வசதியாகவே இல்லை. ஏதாவது செய்யணும் என்று சொல்கிறார். பின் கார்த்திக் வேறு ஒரு கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக சொல்கிறார். இதை கேட்டு கோதை வருத்தப்பட இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
முத்து சொன்ன வார்த்தை.., ரோகிணியை நிற்கவைத்து கேள்வி கேட்கும் விஜயா.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!