முத்து சொன்ன வார்த்தை.., ரோகிணியை நிற்கவைத்து கேள்வி கேட்கும் விஜயா.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!

0
முத்து சொன்ன வார்த்தை.., ரோகிணியை நிற்கவைத்து கேள்வி கேட்கும் விஜயா.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!
முத்து சொன்ன வார்த்தை.., ரோகிணியை நிற்கவைத்து கேள்வி கேட்கும் விஜயா.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் கிரிஷை வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வருகின்றனர். இதை பார்க்க விஜயா ரோட்ல போறது எல்லாம் இங்கையா கூட்டிட்டு வருவீங்க. இது அன்னைக்கு வந்ததால தான் நம்ம வீட்டுல பிரச்சனை என வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இதை மறைந்திருந்து கேட்கும் ரோகிணி எதுவும் பேச முடியாமல் கண் கலங்குகிறார். பின் முத்து விஜயாவை நீங்கெல்லாம் என்ன ஜென்மம் என சத்தம் போட்டுவிட்டு உள்ளே செல்கின்றனர். அப்போது ரோகிணி அவசர அவசரமாக வெளியிட்ட கிளம்ப விஜயா எங்கே என்று கேட்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

உடனே ரோகிணி தனக்கு முக்கியமான வேலை இருப்பதாக சொல்லிவிட்டு செல்கிறார். பின் ஹாஸ்ப்பிட்டலுக்கு செல்லும் ரோகிணி தன் அம்மாவை பார்த்து வருத்தப்படுகிறார். அந்த நேரத்தில் முத்துவும் மீனாவும் வந்துவிட ரோகிணி மறைந்து கொள்கிறார். மீனா அவரது மகள் பற்றி விசாரிக்க அவர் எதுவும் பேசாமல் மழுப்பி விடுகிறார். பின் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி முத்து மீனாவை அனுப்பி வைக்கிறார். ஆனால் மீனாவுக்கு ரோகிணி அம்மா பேசியதில் சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here