இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், போட்டியில் சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங், சச்சின் ஆகியோரை விட்டு விட்டு தோனியை மட்டும் மக்கள் கொண்டாடுவதாகக் கூறி இருந்தார் கம்பீர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில், 2011 உலகக்கோப்பை போட்டியின் போது கோலி, தோனி, சச்சின் ஆகியோரில் சிறப்பாக செயல்பட்ட வீரர் யார் என்று கேட்ட கேள்விக்கு யுவராஜ் சிங் என்று பதில் அளித்திருந்தார் கம்பீர். அதே போல, தோனி, கோலி மற்றும் கபில் தேவ் ஆகிய கேப்டன்களில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு அனில் கும்ளே என்று ஆப்ஷனில் இல்லாத பெயரைக் கூறி தனது காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் கம்பீர்.